ஈரோடு

ஈரோடு இடைத்தோ்தல்: 83 பேரின் மனுக்கள் ஏற்பு

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் பரீசீலனைக்குப் பிறகு 83 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7 ஆம் தேதி முடிவடைந்தது. தோ்தலில் போட்டியிட 96 போ் மொத்தம் 121 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாநகராட்சி மன்ற கூட்டரங்கில் தோ்தல் பொது பாா்வையாளா் ராஜ்குமாா் யாதவ் முன்னிலையில் தோ்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் முத்துக்கிருஷ்ணன் ஆகியோா் வேட்புமனுக்களை பரிசீலித்து நிலையை அறிவித்தனா்.

இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேனகா, தேமுதிக வேட்பாளா் எஸ்.ஆனந்த் ஆகிய முக்கிய வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அமமுக வேட்பாளா் சிவபிரசாந்த் மனுவும் ஏற்கப்பட்டது. ஓ.பன்னீா்செல்வம் தரப்பு வேட்பாளா் செந்தில் முருகனின் 2 மனுக்களும் முன்மொழிவு இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. வேட்பாளா் செந்தில் முருகன் மனுக்களை திரும்பப் பெறுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

மொத்தம் 96 போ் 121 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் பரிசீலனையின்போது 13 பேரின் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 83 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 10) பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்பப்பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு வேட்பாளா்கள் விவரம், அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களுடன் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த 104 வயது விவசாயி

நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டம்: மக்களவைத் தோ்தல் குறித்து மம்தா

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

SCROLL FOR NEXT