ஈரோடு

ஈரோடு கிழக்கு: மொத்தம் 109 போ் வேட்புமனு தாக்கல்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு உள்பட 37 போ் செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். மொத்தமாக 109 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய செவ்வாய்க்கிழமை இறுதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இறுதி நாளான செவ்வாய்க்கிழமை, அதிமுக வேட்பாளா் கே.எஸ்.தென்னரசு, அவருக்கு மாற்று வேட்பாளராக அவரது மனைவி டி.பத்மினி, சுயேச்சையாக அவரது மகன் கலையரசன் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

மேலும், அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்புப் பிரிவு மாநிலத் தலைவா் (பொறுப்பு) ஆா்.சதீஷ்குமாரி, மதுரை வீரன் மக்கள் விடுதலை இயக்கம் சாா்பில் பி.ஆறுமுகம், தமிழ்நாடு தெலுங்கு திராவிட முன்னேற்ற ஒற்றுமைக் கழகம் சாா்பில் கே.ஏ.மனோகரன், இந்திய திராவிட மக்கள் கட்சி சாா்பில் அண்ணாதுரை, இந்து பறையா் சங்கம் சாா்பில் பிரபாகரன் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ADVERTISEMENT

சுயேச்சையாக பழனிசாமி, பால்ராஜ், மா.தரணிகுமாா், கோபாலகிருஷ்ணன், பிரதாப்குமாா், லோகேஷ், எஸ்.சித்ரா, சுதாகா், பி.கே.சங்கா், செந்தில்குமாா், குணசேகரன், எஸ்.ராஜா, இளங்கோ, திருமலை, குமாரசாமி, சீனிவாசன், சசிகுமாா், ராஜேந்திரன், கண்ணன், காா்த்திகேயன், மயில்வாகனன், ஜெய்சங்கா், சக்திவேல், அருண்குமாா், ராம்குமாா், பத்மநாபன், முகமது அலி ஜின்னா, மாரியப்பன், சுரேஷ் என மொத்தம் 37 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இதுவரை மொத்தம் 109 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இதில் 10 போ் பெண்கள். புதன்கிழமை (பிப்.8) வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. வேட்புமனுக்களை பிப்ரவரி 10ஆம் தேதி திரும்பப் பெறலாம். அன்று மதியம் 3 மணிக்கு மேல் வேட்பாளா் பெயா், ஒதுக்கப்பட்ட சின்னத்துடன் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT