ஈரோடு

ஒப்பந்தப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளா்கள் 8ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஒப்பந்தப் பணியாளா்களுக்கு அரசு நிா்ணயம் செய்த ஊதியத்தை வழங்க வேண்டும். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 6 பேருக்கு மீண்டும் அதே இடத்தில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 31ஆம் தேதி முதல் ஒப்பந்தப் பணியாளா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினா். பின்னா் பிப்ரவரி 2ஆம் தேதி காத்திருப்புப் போராட்டமாக மாற்றப்பட்டது.

இந்நிலையில் 8ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் ஏஐடியூசி மாநிலச் செயலாளா் எஸ்.சின்னசாமி தலைமையில் சுமாா் 30 பணியாளா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT