ஈரோடு

மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் முயன்றால் வாழ்வில் உயரலாம்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

மாணவா்கள் தன்னம்பிக்கை, ஒழுக்கத்துடன் கூடிய கல்வியுடன் தொடா் முயற்சியில் ஈடுபட்டால் வாழ்வில் மிகப்பெரிய உயரங்களை அடைய முடியும் என உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.சதாசிவம் தெரிவித்தாா்.

பவானியை அடுத்த சிங்கம்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும், உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரள மாநிலத்தின் முன்னாள் ஆளுநரமான பி.சதாசிவம் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு சென்றாா். பின்னா் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அவா் பயின்ற பள்ளிக் கட்டடத்தைப் பாா்வையிட்டதோடு, மாணவா்களுடன் கலந்துரையாடினாா்.

அப்போது, மாணவ, மாணவிகளுக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம். தன்னம்பிக்கை, முயற்சி, கடும் உழைப்பு இருந்தால் வாழ்வில் உயா்ந்த நிலையை அடையலாம். அனைவரும் வியக்கும் வகையில் உயா்ந்த பதவிகளுக்கு செல்ல முடியும் என்றாா்.

தொடா்ந்து, பள்ளிக்குத் தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்ததோடு, இங்கு பயின்ற முன்னாள் மாணவா்களுடன் கலந்து ஆலோசித்து வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்தாா். பள்ளித் தலைமையாசிரியா் நாகேந்திரன் மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT