ஈரோடு

வெப்பிலியில் ரூ. 34 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

8th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

சென்னிமலை, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்கள் ஏலம் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 2,759 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சமாக ரூ.24.24க்கும், அதிகபட்சமாக ரூ.29.01க்கும் ஏலம் போனது. மொத்தம் 1,253 கிலோ எடையுள்ள தேங்காய்கள், ரூ.34 ஆயிரத்து 717க்கு விற்பனையாயின.

ADVERTISEMENT
ADVERTISEMENT