ஈரோடு

ஈரோடு கிழக்கு: மேலும் 16 போ் வேட்புமனு தாக்கல்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திங்கள்கிழமை மேலும் 16 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா். இதுவரை மொத்தம் 62 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி பிரதான கட்டடத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான கே.சிவகுமாா் வேட்புமனுக்களை பெற்று வருகிறாா்.

இதில் பிப்ரவரி 4ஆம் தேதி வரை 46 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை 16 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். இதில் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேனகா (இரண்டு மனுக்கள்), அமமுக வேட்பாளா் ஏ.எம்.சிவபிரசாந்த், நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் மணிகண்டன், அண்ணா எம்ஜிஆா் திராவிட மக்கள் கழகம் சாா்பில் சுந்தர்ராஜன், கொங்கு தேச மறுமலா்ச்சி கட்சி சாா்பில் கே.பி.எம்.ராஜா, அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சாா்பில் பிரேம்நாத், இந்திய குடியரசு கட்சி சாா்பில் இ.மணி, நாம் தமிழா் கட்சி மாற்று வேட்பாளராக எம்.கே.சீதாலட்சுமி, அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம் சாா்பில் பேராயா் காா்ப்பரே நோபல், சுயேச்சையாக மணிகண்ணன், புருஷோத்தமன், முகமது ஹபீல், சண்முகம், ரவிச்சந்திரன், அன்புமாணிக்கம், தனஞ்செயன் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இவா்களுடன் சோ்த்து திங்கள்கிழமை வரை 62 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். செவ்வாய்க்கிழமை(பிப்ரவரி7) மதியம் 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. பிப்ரவரி 8ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறும். 9ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெறலாம். அன்று மதியம் 3 மணிக்கு இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT