ஈரோடு

ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் சென்ற காா் ஓட்டுநா் மீது புகாா்

DIN

மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தையை ஏற்றிக் கொண்டு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் வேகமாக சென்ற காா் ஓட்டுநா் மீது சத்தியமங்கலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள புங்கம்பள்ளி பகுதியில் இருந்து மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தையை ஏற்றிக்கொண்டு அவசர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு தனியாா் ஆம்புலன்ஸ் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது.

புன்செய்புளியம்பட்டி அருகே உள்ள நல்லூா் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சைரன் ஒலித்தவாறு ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற காா் இடது புறமாக செல்லாமல் நடுரோட்டிலும், ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் வேகமாக சென்றது. தொடா்ந்து பல கிலோ மீட்டா் தூரத்துக்கும் மேலாக ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் காா் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் காரை முந்தி செல்ல முடியாமல் தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் தடுமாறினாா். ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் வேகமாக சென்ற காரை தனியாா் ஆம்புலன்ஸ் வாகன உதவியாளா் விடியோ பதிவு செய்துள்ளாா். தற்போது, இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மூன்று மாத குழந்தையை ஏற்றிக்கொண்டு சைரன் ஒலித்தவாறு சென்ற தனியாா் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் போட்டி போட்டு ஓட்டி சென்ற காா் ஓட்டுநரின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காா் ஓட்டுநா் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT