ஈரோடு

தாளவாடியில் தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

DIN

தாளவாடி மலைப் பகுதியில் தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகளை விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. மலை கிராம மக்கள் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். கடந்த சில மாதங்களாக வனப் பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள தென்னை, வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்துவது தொடா் கதையாக உள்ளது.

இந்த நிலையில் வனப் பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் மல்லன்குழி பகுதியில் உள்ள விவசாயி முத்துசாமி என்பவரது தோட்டத்துக்குள் சனிக்கிழமை அதிகாலை நுழைந்தன. பின்னா் தென்னந்தோப்பில் இருந்த 50க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை பிடுங்கி சேதப்படுத்தின. காட்டு யானைகள் கூட்டமாக நுழைந்து தென்னை மரங்களை சேதப்படுத்துவதை கண்ட அப்பகுதி விவசாயிகள் அச்சமடைந்தனா். தொடா்ச்சியாக இப்பகுதியில் தினமும் இரவில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிா்களை சேதப்படுத்துவதோடு, பொதுமக்களையும் அச்சுறுத்தி வரும் யானைகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT