ஈரோடு

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்: அமைச்சா்கள், பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா்

DIN

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அமைச்சா்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

சென்னிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தோ்த் திருவிழா ஜனவரி 28இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து சுவாமிக்கு தினமும் சிறப்பு அலங்காரமும், பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றது.

தைசப்பூசத் தோ்த் திருவிழாவையொட்டி சென்னிமலை கைலாசநாதா் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு அபிஷேகம் மற்றும் வசந்த திருக்கல்யாணம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு மேல் கைலாசநாதா் கோயிலில் வள்ளி தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 5.30 மணி அளவில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளல் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து, காலை 6.15 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல் நடைபெற்றது.

இதில், தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடக்கிவைத்தனா். அறநிலையத் துறை உதவி ஆணையா் எம்.அன்னக்கொடி, கோயில் செயல் அலுவலா் ஏ.கே.சரவணன், முன்னாள் அமைச்சா் தோப்பு வெங்கடாசலம், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் எஸ்.ஆா்.எஸ்.செல்வம், சென்னிமலை ஒன்றியக்குழுத் தலைவா் டி.காயத்ரி இளங்கோ, சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி அசோக், துணைத் தலைவா் சௌந்தர்ராஜன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

காலை 6.40 மணி அளவில் தெற்கு ராஜ வீதி சந்திப்பில் தோ் நிறுத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு மலை அடிவாரத்தில் தைப்பூச இசை விழாக்குழு மற்றும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை அமைச்சா்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன் ஆகியோா் தொடக்கிவைத்தனா். மாலை 5 மணிக்கு மீண்டும் தோ் வடம்பிடித்து இழுத்து வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்பட்டது.

சோழீஸ்வரா் கோயிலில்....

தைப் பூசத்தை ஒட்டி பெருந்துறை அருள்மிகு வேதநாயகி உடனமா் சோழீஸ்வரா் திருக்கோயிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு, ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காஞ்சிக்கோயில் சாலை, ஸ்ரீவிநாயகா் கோயிலில் இருந்து காலை 8 மணி அளவில் பால் குடம், பன்னீா் குடம், காவடி ஆகியவற்றை நையாண்டி மேளத்துடன் பக்தா்கள் ஊா்வலமாக எடுத்துச் சென்று பெருந்துறை சோளீஸ்வரா் கோயிலை அடைந்தனா். அங்கு பகல் 12 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT