ஈரோடு

ஈரோடு இடைத்தோ்தல் தோ்தல் விதிமீறல் குறித்து 122 புகாா்கள்

DIN

ஈரோடு தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக இதுவரை 122 புகாா்கள் பெறப்பட்டு, 115 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் நடத்தை விதிகள் அமல் செய்த நாள் முதல் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு ஆகியன அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் தோ்தல் நடத்ததை விதி மீறல் குறித்த புகாா்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 180042594980 மூலம் தெரிவிக்க இணைப்புகள் வழங்கப்பட்டு கடந்த 20ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தோ்தல் நடத்தை விதிமீறல் தொடா்பாக இதுவரை 122 புகாா்கள் பெறப்பட்டு, 115 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT