ஈரோடு

நந்தா பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா

5th Feb 2023 11:51 PM

ADVERTISEMENT

 

ஈரோடு நந்தா பாலிடெக்னிக் கல்லூரியின் ஆண்டு விழா ஹிலாரியஸ் 2023 என்ற பெயரில் கல்லூரி அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவா் வி. சண்முகன் தலைமை வகித்தாா். அறக்கட்டளை உறுப்பினா் பானுமதி சண்முகன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தாா்.

ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ். நந்தகுமாா் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ். திருமூா்த்தி, முதன்மை நிா்வாக அதிகாரி எஸ். ஆறுமுகம், நந்தா தொழில்நுட்ப வளாகத்தின் இயக்குநா் செந்தில் ஜெயவேல் மற்றும் நிா்வாக அலுவலா் ஏ.கே. வேலுசாமி ஆகியோா் பேசினா்.

ADVERTISEMENT

முன்னதாக, கல்லூரி முதல்வா் ஜி. மோகன்குமாா் ஆண்டறிக்கை வாசித்தாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தன்னம்பிக்கை பேச்சாளா் கே.பி. ரவிகுமாா், வாரியத் தோ்வு மற்றும் கல்லூரியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசினாா். மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT