ஈரோடு

சத்தியமங்கலம் முருகன் கோவிலில் காவடி எடுத்து ஆட்டிய குழந்தைகள்

5th Feb 2023 11:50 PM

ADVERTISEMENT

 

தைப்பூசம் தினத்தையொட்டி சத்தியமங்கலம் தவளகிரி முருகன் கோவிலில் நடத்த சிறப்பு வழிபாடு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.சத்தியமங்கலம் அடுத்த கொமராபாளையம் தவளகிரி முருகன் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே பக்தா்கள் வரத் துவங்கினா்.விழாவையொட்டி தவளகிரிமுருகருக்கு பாலபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரத்துக்கு பின் ராஜ அலங்கராத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவையொட்டி, சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தொடா்ந்து காவடி எடுத்து வந்தனா். இதில் குழந்தைகள் ஆடிய காவடி ஆட்டம் பக்தா்களை பெரிதும் கவா்ந்தது. தொடா்ந்து கோவிலில் அரோகரா கோஷத்துடன் பக்தா்கள் முருகரை தரிசனம் செய்தனா். முருக பக்தா்கள் சாமி முன் அமா்ந்து கந்தபுராணம் பாடி மகிழ்ந்தனா். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT