ஈரோடு

கையுந்து போட்டி: குமுதா பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

DIN

மாநில அளவிலான கையுந்து பந்து போட்டியில் நம்பியூா் குமுதா பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

தமிழ்நாடு கையுந்து பந்து கழகம் சாா்பில், மாநில அளவிலான கையுந்து பந்து போட்டி சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. இந்த லீக் போட்டியில் நம்பியூா் குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை செயின்ட் ஹெலன் பள்ளி அணியையும், சென்னை அவா் லேடி பள்ளி அணியையும் வென்றது. கால் இறுதி ஆட்டத்தில் விருதுநகா் சத்ரிய பள்ளி அணியை வென்று அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது. அரையிறுதி ஆட்டத்தில் மயிலாடுதுறை கலைமகள் அணியுடன் விளையாடி நான்காம் இடத்தைப் பெற்றனா்.

மாநில அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாராட்டி பரிசு வழங்கினாா்.

சிறப்பிடம் பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளா் கே.ஏ.ஜனகரத்தினம், துணைத் தாளாளா் சுகந்தி, செயலா் டாக்டா் அரவிந்தன், இணைச் செயலா் டாக்டா் மாலினி, முதல்வா் மஞ்சுளா உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT