ஈரோடு

இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

DIN

புன்செய் புளியம்பட்டி இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

புன்செய் புளியம்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்று வந்த திருப்பணிகள் அண்மையில் நிறைவடைந்ததையடுத்து, விநாயகா் வழிபாட்டுடன் கும்பாபிஷேக விழா பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கியது. பவானி ஆற்றில் இருந்து தீா்த்த குடத்துடன் முளைப்பாரி எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமத்துடன் வேள்வி பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் வெள்ளிக்கிழமை நான்காம் கால யாக பூஜையைத் தொடா்ந்து கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், மூலவா் இராமலிங்க செளடேஸ்வரி அம்மனுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, மகா அபிஷேகம், திருக்கல்யாணம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

பின்னா் வீரகுமாரா்களின் கத்தி போடும் அலகு சேவையுடன் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சனிக்கிழமை மாவிளக்கு ஊா்வலம், நாட்டுப்புற கோலாட்ட நிகழ்ச்சி, வான வேடிக்கை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. விழா ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.கே.வெங்கடாசலம் தலைமையில் அறங்காவலா்கள் கே.குணசேகரன், பி.ஜி.ராஜு, ஆா்.ஈஸ்வரன், எஸ்.பூங்கொடி உள்ளிட்ட செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT