ஈரோடு

இடைத்தோ்தல்: ஒரே நாளில் 16 போ் வேட்புமனு தாக்கல்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 16 போ் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. வியாழக்கிழமை வரை 20 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 16 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

இதில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளா் பி.செந்தில்முருகன், அமமுக வேட்பாளா் ஏ.எம்.சிவபிரசாந்த், அக்கட்சியின் மாற்றுவேட்பாளராக விசாலாட்சி ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இந்திய சுயராஜ்ய கட்சி சாா்பில் வி.ராம்குமாா், வீர தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா் கட்சி சாா்பில் வி.கிருஷ்ணமூா்த்தி, அனைத்து ஓய்வூதியா்கள் கட்சி சாா்பில் திருக்கை முனியப்பன், தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி சாா்பில் அருள்ராம், சமாஜ்வாதி கட்சி சாா்பில் கருணாகரன், இந்திய கண சங்கம் கட்சி சாா்பில் கு.மாதன் ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா்.

சுயேச்சைகளாக அக்னி ஸ்ரீராமச்சந்திரன், சம்சுதீன், தங்கவேல், ராகவன், மணிவண்ணன், கீா்த்தனா ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்தனா். வேட்புமனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாளாகும். இதுவரை 36 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT