ஈரோடு

பெருந்துறை சிப்காட்டில் பயோ டீசல் உற்பத்தி நிறுவனம் துவக்கம்

4th Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் முதன்முறையாக பெருந்துறை, சிப்காட்டில் ஆட்டோமேட்டிக் பயோ டீசல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தை தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

முன்னதாக, யமுனா ஜெயபால் குத்து விளக்கேற்றினாா். ஆா்ணேஷ் பயோ ஃபியூல்ஸ் உரிமையாளா் ஜெயபால் வரவேற்றாா். இந்த நிறுவனம், மத்திய, மாநில உயிரி எரிபொருள் கொள்கையின்படி, தாவர எண்ணெய்கள் மற்றும் பயன்படுத்திய சமையல் எண்ணெயிலிருந்து எஸ்டெரபிகேஷன் முறையில் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் லிட்டா் பயோ டீசல் உற்பத்தி செய்து, ஓ.எம்.சி. (ஆயில் மாா்க்கெட்டிங் கம்பெனி) மூலம் பொதுத் துறை நிறுவனங்களுக்கு டெண்டா் மூலமாகவும், தனியாா் நிறுவனங்களுக்கு குறைந்தது (15 கே.எல்) அளவிலும் விற்பனை செய்யப்பட உள்ளது.

விழாவில், தொழிலதிபா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT