ஈரோடு

முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி: கிலோ ரூ.1க்கு கொள்முதல்

DIN

முட்டைக்கோஸ் விலை வீழ்ச்சி காரணமாக கொள்முதல் விலை கிலோ 1 ரூபாய் ஆக சரிந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தாளவாடி, கொங்கள்ளி, பனகஹள்ளி, தொட்டகாஜனூா் பாரதி நகா், கெட்டவாடி, தலமலை, அருள்வாடி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் காய்கறிகள் பயிரிடுவது வழக்கம். கடந்த ஆண்டு முட்டைக்கோஸூக்கு நல்ல விலை கிடைத்ததால் இந்த ஆண்டு இப்பகுதிகளில்

100 ஏக்கா் பரப்பளவில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. அதிக வரத்து காரணமாக முட்டைக்கோஸ் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து கிலோ ரூ.1க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் விவசாயிகளிடம் 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் முட்டைக்கோஸ் வெளிமாா்க்கெட்டில் கிலோ ரூ.20 வரை விற்கப்படுகிறது. நாற்று நடுதல், உரம், மருந்து என கிலோவுக்கு ரூ.10 வரை உற்பத்தி செலவாகும் நிலையில் முட்டைக்கோஸ் கிலோ ரூ.1க்கு விற்கப்படுவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனா். இதனால் பெரும்பாலான நிலங்களில் முட்டைக்கோஸ் அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுள்ளனா். விவசாயிகள் நலன் கருதி அரசு கட்டுப்படியான விலைக்கு கொள்முதல் செய்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT