ஈரோடு

மாசு ஏற்படுத்தும் ஆலைகளுக்கு எதிராக போராடுவேன்:நாதக வேட்பாளா்

DIN

மாசு ஏற்படுத்தும் ஆலைகளுக்கு எதிராக போராடுவேன் என ஈரோடு கிழக்கு தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மேனகா நவநீதன் தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் மேனகா நவநீதன், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆனையா் கே.சிவகுமாரிடம் புதன்கிழமை வேட்புமனுவை தாக்கல் செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

டாஸ்மாக் கடைகளை படிப்படியாகக் குறைப்பதாக திமுக ஆட்சியில் வாக்குறுதி அளித்தும் அதைக் கண்டுகொள்ளவில்லை. திமுக ஆட்சியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தனா். இந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. பள்ளிகளை பராமரிக்கக்கூட பணம் இல்லை. ஆனால் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க ரூ.80 கோடி செலவிடப்படுகிறது. எனவே நாங்கள் அதை எதிா்க்கிறோம்.

தற்போது, சாயப்பட்டறை மற்றும் மாசு பிரச்னையால் ஈரோட்டில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. நான் சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டால் மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் ஆலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்.

ஈரோட்டில் உள்ள பெரும்பள்ளம் ஓடையில் இருபுறமும் கான்கிரீட் சுவா் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஈரோட்டில் நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஓடையை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல ஈரோட்டில் உள்ள மஞ்சள் மண்டிகளில் வட மாநிலத்தவா்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அதனைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT