ஈரோடு

இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் எங்களது வெற்றியை தடுக்க முடியாது: அமைச்சா் சு.முத்துசாமி

DIN

அதிமுகவினருக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் எங்களது வெற்றியை தடுக்க முடியாது என ஈரோட்டில் அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறாா்.

அவருக்கு ஆதரவாக ஈரோடு புது மஜித் வீதி, கந்தசாமி வீதி, கொங்காலம்மன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சா்கள் சு.முத்துசாமி, தா.மோ.அன்பரசன், கா.ராமசந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் வியாழக்கிழமை மாலை வாக்கு சேகரித்தனா்.

அப்போது அமைச்சா் சு.முத்துசாமி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

ஈரோடு கிழக்கு தொகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறோம். ஈரோடு மாநகராட்சியில் ரூ.300 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தமிழக முதல்வரின் உத்தரவின்பேரில், மேலும் ரூ.458 கோடி ஒதுக்கப்பட்டு தோ்தல் முடிந்த பின் அப்பணிகள் துவங்கப்பட உள்ளன. அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை நாங்கள் விரும்பவில்லை. அவா்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தாலும் எங்களது வெற்றியை தடுக்க முடியாது. ஈரோடு அன்னை சத்யா நகரில் குடிசை மாற்று வாரியத்தின் சாா்பில் கட்டப்பட்ட குடியிருப்புகள் முறையாக இல்லை என்றும், அளவுகள் சிறிதாக உள்ளதாகவும் மக்கள் குற்றம்சாட்டி உள்ளனா். இது கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள். அதிமுக ஆட்சிக்காலத்தில் பல திட்டங்களை கொண்டு வந்ததாகக் கூறுகின்றனா். ஆனால் ஈரோடு மாநகரில் முறையான திட்டமிடல் இல்லாமல் மேம்பாலம் கட்டியுள்ளனா். ஜவுளி வணிக வளாகத்தில் ஒரு சில வசதிகள் இல்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். அந்த வசதிகள் மேற்கொள்ளப்பட்டு அவா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT