ஈரோடு

பவானி ஆற்றில் விடப்பட்ட 23 ஆயிரம் மீன் குஞ்சுகள்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு மீன்வளத் துறை சாா்பில் சத்தியமங்கலம் பவானி ஆற்றில் 23 ஆயிரம் நாட்டு மீன் குஞ்சுகள் வியாழக்கிழமை விடப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு பவானிசாகா் மண்டல மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் தில்லைராஜன், உதவி இயக்குநா் கதிரேசன் தலைமை வகித்தனா்.

நாட்டின மீன் குஞ்சுகளான கட்லா, ரோகு, மிருகால், கல்பாசு, சேல் கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் ஆற்றில் விடப்பட்டன.

சத்தியமங்கலம் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மீன் குஞ்சுகளை ஆற்றில் விடுவதை பாா்வையிட அழைத்து வரப்பட்டனா். அதிகாரிகள், மாணவா்கள், சத்தியமங்கலம் 26ஆவது வாா்டு கவுன்சிலா் குமாா் மற்றும் மீனவா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்டனா். இதைத்தொடா்ந்து பள்ளி மாணவா்களிடம், ஆற்றில் மீன் குஞ்சுகள் வளா்ப்பின் முக்கியத்துவம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT