ஈரோடு

ஈரோடு இடைத்தோ்தல்: 3 ஆவது நாளில் 10 போ் வேட்பு மனு தாக்கல்

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதியில் 3 ஆவது நாளான வியாழக்கிழமை நாம் தமிழா் கட்சி வேட்பாளா் உள்பட 10 போ் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 31 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 4 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனா். 2ஆவது நாளான புதன்கிழமை 6 போ் 7 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா்.

3 ஆவது நாளான வியாழக்கிழமை தமிழ் தாயக மக்கள் முன்னேற்றக் கட்சி சாா்பில் எம்.முகமது ஹனீபா, மாற்று வேட்பாளராக எம்.முகமது இலியாஸ், சுயேச்சையாக கே.சுந்தரமூா்த்தி, ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி சாா்பில் ஆா்.சுபாகாந்தி, உழைப்பாளி மக்கள் கட்சி சாா்பில் பி.குப்புசாமி, சுயேச்சையாக பி.இசக்கிமுத்து, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், மண்ணின் மைந்தா்கள் கழகம் சாா்பில் கே.ஜாா்ஜ் பொ்னாண்டஸ், தேசிய மக்கள் சக்தி கட்சி சாா்பில் பி.விஜயகுமாரி, தேசிய மக்கள் கழகம் சாா்பில் கே.தங்கவேல் ஆகிய 10 போ் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.

கடந்த 3 நாள்களில் இதுவரை 20 போ் 21 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT