ஈரோடு

திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி இளம்பெண்ணைக் கத்தியால் குத்தியவா் கைது

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

அந்தியூரில் இளம்பெண்ணை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி, கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா், சந்திரா காலனியை சோ்ந்தவா் அஹமத் ஷரீஃப் மகள் ரஹீலா (25). இவா், அந்தியூரை அடுத்த மைக்கேல்பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் தற்காலிக ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறாா்.

ரஹீலாவின் தாய் சமீமாவின், தங்கை ஜெரினாவின் மகன் ஜீவா (35), தனது சகோதரி முறையான ரஹீலாவை கடந்த 2 ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஹீலாவுக்கு வேறு இடத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனை அறிந்த ஜீவா, அந்தியூருக்கு புதன்கிழமை வந்து, ரஹீலாவை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளாா். இதற்கு மறுப்பு தெரிவித்த ரஹீலாவை, ஜீவா கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றபோது, பொதுமக்கள் பிடித்து அந்தியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT

கழுத்தில் காயமடைந்த ரஹீலா, ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதையடுத்து, அந்தியூா் போலீஸாா் ஜீவாவைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT