ஈரோடு

கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

3rd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள கோரக்காட்டூா் கரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 18ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடா்ந்து தீா்த்தம் கொண்டு வருதல், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாவிளக்கு ஊா்வலம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இரவு குண்டம் திறக்கப்பட்டு தீ மூட்டப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் தலைமை பூசாரி குண்டத்தில் இறங்கினாா். அதைத் தொடா்ந்து பக்தா்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT