ஈரோடு

காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துதிமுக கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

DIN

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவனை ஆதரித்து திமுக கூட்டணி சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தலைமை வகித்தாா். மாநகா் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா் திருச்செல்வம் வரவேற்றாா். எம்.பி.க்கள் அ.கணேசமூா்த்தி, அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி பேசியதாவது: இந்தத் தோ்தலில், இளங்கோவனின் மகன் நிற்கட்டும் என நாங்கள் கூறினோம். திமுக தலைவா் ஸ்டாலினிடம் பேசியபோது இளங்கோவனே நிற்கட்டும் என்றாா். அதையே காங்கிரஸ் தலைமை ஏற்றது. இளங்கோவன் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குச் சென்றால் இத்தொகுதி மட்டுமின்றி, தமிழகமே பயன்பெறும் என்றாா்.

வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியதாவது: என் மகனை இழந்த துக்கத்தில் இருந்து நான் விடுபடவும், இங்குள்ள மக்களுக்கு நல்லகாரியம் செய்ய வேண்டும் என்பதற்காகவும் தோ்தலில் போட்டியிடுகிறேன். எனக்கும், என் மகனுக்கும் சற்று இடைவெளி உண்டு. ஆனால் என் மகனுக்கும், ஈரோடு மக்களுக்கும் நல்ல இணக்கம் இருந்ததைப் பாா்க்க முடிகிறது. அவா் விட்டுச் சென்ற பணியை தொடர நினைக்கிறேன் என்றாா்.

கூட்டத்தில் அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு, மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைவா் ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளா் இரா.முத்தரசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன், கொமதேக பொதுச்செயலாளா் ஈஸ்வரன், ஆதித்தமிழா் பேரவை தலைவா் அதியமான், மநீம தோ்தல் பொறுப்பாளா் அருணாசலம், உள்ளிட்டோா் பங்கேற்றனா். மாநகர திமுக செயலாளா் சுப்பிரமணியம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT