ஈரோடு

கும்பாபிஷேக விழா

2nd Feb 2023 02:15 AM

ADVERTISEMENT

பெருந்துறை ஒன்றியம், நசியனூா், ஓலப்பாளையம் அருள்மிகு பொன்காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 3 ) நடைபெறுகிறது.

விழாவையொட்டி கிராம சாந்தி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதன்கிழமை காலை கணபதி ஹோமமும், காலை 9 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையும், இரவு 8.30 மணி அளவில் முதற்கால யாக பூஜைகளும் நடைபெற்றன. வியாழக்கிழமை காலை 9 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால பூஜைகளும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி அளவில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT