ஈரோடு

இடைத்தோ்தல்: 2ஆவது நாளில் 6 போ் வேட்பு மனு தாக்கல்

2nd Feb 2023 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு கிழக்கு தொகுதியில் இரண்டாவது நாளான புதன்கிழமை தேமுதிக வேட்பாளா் உள்பட 6 போ் 7 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 4 சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இரண்டாவது நாளான புதன்கிழமை தேமுதிக வெட்பாளா் எஸ்.ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தாா். அவா் கூடுதலாக ஒரு வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். தேமுதிக மாற்று வேட்பாளராக சி.சரவணன் என்பவா் வேட்பு மனு தாக்கல் செய்தாா்.

விடுதலைக்களம் கட்சி சாா்பில் ரா.விஜயகுமாா், அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்றக் கழகம் சாா்பில் பு.சசிகுமாா், சுயேச்சையாக அ.ரவி, சௌ.வீரக்குமாா் ஆகியோா் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

இரண்டு நாள்களில் 10 போ் மொத்தம் 11 வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT