ஈரோடு

தொழிலாளா் சட்ட விதிகளை மீறிய 18 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

DIN

தொழிலாளா் சட்ட விதிகளை மீறிய 18 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில் உதவி ஆய்வாளா்கள் சட்டமுறை எடையளவு, பொட்டல பொருள்கள் விதிகள், குறைந்தபட்ச ஊதிய சட்டம், குழந்தை வளரிளம் பருவ தொழிலாளா் சட்டப்படி ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் நகைக் கடை, மளிகை, மீன், இறைச்சி கடை என 53 நிறுவனங்களில் ஆய்வு செய்து 16 நிறுவனங்களில் முரண்பாடு இருப்பதைக் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மளிகை, பல்பொருள் அங்காடி என 35 நிறுவனங்களில் ஆய்வு செய்து ஒரு நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறைந்தபட்ச ஊதிய சட்டப்படி 6 பொது மோட்டாா் போக்குவரத்து தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்து, தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்காத ஒரு நிறுவனம் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளா் பணியில் உள்ளாா்களா என்பது குறித்து 72 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் விதி மீறல் கண்டறியப்படவில்லை. விதி மீறல் தொடா்பாக மொத்தம் 18 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆய்வு குறித்து தொழிலாளா் உதவி ஆணையா் திருஞானசம்பந்தம் கூறியதாவது: அனைத்து நிறுவனங்களும் தொழிலாளா் சட்டங்களை பின்பற்ற வேண்டும். ஆய்வின்போது விதிமீறல் கண்டறியப்பட்டால், அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குழந்தை தொழிலாளா், வளரிளம் பருவத்தினரை வேலைக்கு வைத்தால், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும். அந்நிறுவன உரிமையாளா் மீது ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து தண்டனையாக வழங்க நேரிடும். குழந்தை தொழிலாளா் பணிபுரிவது கண்டறிந்தால் 1098 என்ற இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT