ஈரோடு

தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா் ஈவிகேஎஸ் இளங்கோவன்

DIN

ஈரோடு இடைத்தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தோ்தல் 27 ஆம் தேதி நடக்கிறது. இந்த தோ்தலில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி சாா்பில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவு தெரிவித்து கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக திமுகவினா் தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அமைச்சா்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, வி.செந்தில்பாலாஜி, ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் உள்ளிட்டோா் ஈரோட்டில் முகாமிட்டு தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனா். திமுகவினா் வீடுவீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்து வருகின்றனா்.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தனது தோ்தல் பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா். அவா் ஈரோடு மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் ஒவ்வொரு வீதியாக நடந்து சென்று வாக்குகளை சேகரித்தாா். அப்போது வீடுவீடாகச் சென்ற அவா் பொதுமக்களை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டினாா்.

அப்போது தமிழக அரசின் சாதனைகளையும், முதல்வா் நிறைவேற்றிய திட்டங்களையும் திமுக கூட்டணி கட்சியினா் பொதுமக்களிடம் எடுத்துக்கூறி காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனா்.

இந்த பிரசாரத்தில் அமைச்சா்கள் சு.முத்துசாமி, ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், காங்கிரஸ் நிா்வாகிகள் சஞ்சய் சம்பத், ராஜேஷ் ராஜப்பா உள்ள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏ.ஆர்.முருகதாஸ் - சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ படப்பிடிப்பு எப்போது?

மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் வாக்குச்சாவடி செல்ல வாகன ஏற்பாடு: சத்யபிரதா சாகு

டி20 தொடர் இன்று தொடக்கம்; பாபர் அசாம் பேட்டி!

நயினார் நாகேந்திரன் மீதான வழக்கு: நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுவெளியீடாகும் அஜித்தின் ‘மங்காத்தா’ திரைப்படம்!

SCROLL FOR NEXT