ஈரோடு

ஈரோட்டில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

26th Apr 2023 09:34 PM

ADVERTISEMENT

அகவிலைப்படி, சரண்டா் போன்றவற்றை வழங்க வலியுறுத்தி அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஈரோட்டில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு வணிக வரித் துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விஜயமனோகரன் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படி, சரண்டா் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா், எம்ஆா்பி செவிலியா்கள், ஊா்ப்புற நூலகா்கள், கணினி இயக்குபவா், மகளிா் திட்ட ஊழியா்கள், குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட ஊழியா்கள் உள்பட பல்வேறு துறையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றுவோரை நிரந்தரப்படுத்தி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக ஏற்க வேண்டும். நிரந்தரமான பணியிடங்களை அழிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரந்தர பணியாளா்கள் மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல, மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை அலுவலகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT