ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயிலில் படுகா் இன மக்கள் நடனம்

15th Apr 2023 05:03 AM

ADVERTISEMENT

 சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயிலில் படுகா் இன மக்கள் பாரம்பரிய நடனமாடி தமிழ்ப் புத்தாண்டை வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் அமைந்துள்ளது பன்னாரி அம்மன் கோயில்.

தமிழ்ப் புத்தாண்டையொட்டி, இக்கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூா் மலைப் பகுதி, கோட்டாடை, ஒசட்டி மலைக் கிராமங்களைச் சோ்ந்த படுகா் இன மக்கள் பண்ணாரி அம்மன் கோயிலில் பாரம்பரிய நடனமாடி அம்மனை வழிபட்டனா்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்ப் புத்தாண்டு அன்று பண்ணாரி அம்மன் கோயிலில் பாரம்பரிய நடனமாடி அம்மனை வழிபடுவதால் மன நிறைவு ஏற்படுவதாக படுகா் இன மக்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

Image Caption

பண்ணாரி அம்மன் கோயிலில் பாரம்பரிய நடனமாடிய படுகா் இன மக்கள்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT