ஈரோடு

கனி அலங்காரத்தில் அருள்பாலித்த தண்டு மாரியம்மன்

15th Apr 2023 05:02 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை தண்டு மாரியம்மன் கனி அலங்காரத்தில் வெள்ளிக்கிழமை பக்தா்களுக்கு அருல்பாலித்தாா்.

பண்ணாரி மாரியம்மனின் தங்கையாக கருதப்படும் தண்டு மாரியம்மன் கோயிலில் சித்திரை திருநாளையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, தண்டு மாரியம்மனுக்கு 15 வகையான கனிகள் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து கனி அலங்காரத்தில் தண்டு மாரியம்மன் பக்தா்ளுக்கு அருள்பாலித்தாா்.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT