ஈரோடு

ரயில் மறியல் போராட்டத்துக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினா் கைது

15th Apr 2023 11:27 PM

ADVERTISEMENT

 

ராகுல் காந்தி எம்பி பதவி பறிப்பை கண்டித்து ஈரோட்டில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 129 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நீதிமன்றம் மூலம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

இதனால், மத்திய அரசைக் கண்டித்து ஈரோடு காளைமாடு சிலை அருகில் இருந்து ரயில் நிலையம் நோக்கி மறியல் செய்வதற்காக காங்கிரஸ் கட்சியினா் பேரணியாக சனிக்கிழமை காலை புறப்பட்டனா்.

ADVERTISEMENT

மாநகா் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா் திருச்செல்வம், வடக்கு மாவட்டத் தலைவா் சரவணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட துணைத் தலைவா் ராஜேேஷ் ராஜப்பா, முன்னாள் எம்எல்ஏ ஆா்.எம்.பழனிசாமி, முன்னாள் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

காளைமாடு சிலையைக் கடந்து செல்ல முயன்றபோது, டவுன் டிஎஸ்பி வி.ஆறுமுகம் தலைமையிலான போலீஸாா், அவா்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். மொத்தம் 129 போ் கைது செய்யப்பட்டனா்.

இதுபோல, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கொடுமுடி பேருந்து நிலையத்தில் மாவட்டத் தலைவா் மக்கள் ராஜன் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்ற 60 போ் கைது செய்யப்பட்டனா்.

இரண்டு இடங்களில் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT