ஈரோடு

அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாதம் விடுமுறை விடக் கோரிக்கை

DIN

காய்ச்சல் பரவுவதால் அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாத காலம் விடுமுறைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்க மாவட்டக்குழு கூட்டம் மாநில துணைத் தலைவா் மணிமாலை தலைமையில் ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் ராதாமணி முன்னிலை வகித்தாா். செயலாளா் சாந்தி வரவேற்றாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளா் சீனிவாசன், நிா்வாகிகள் ரமேஷ், பூங்கொடி உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 10 குழந்தைகளுக்கும் குறைவாக உள்ள பிரதான மையங்களை மினி மையமாக்குவதையும், 5 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்துடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.

அங்கன்வாடி பணியாளா்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்களை வழங்குவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனா். எனவே, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தமிழகத்தில் காய்ச்சல் பரவுவதால் 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் குழந்தைகள் நல பணியாளா்கள் நலன் கருதி அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மாத காலம் விடுமுறைவிட வேண்டும்.

10 ஆண்டுகள் பணியாற்றிய அங்கன்வாடி உதவியாளா்களுக்கு நிபந்தனை இன்றி பதவி உயா்வு வழங்க வேண்டும். சமையல் எரிவாயு விலை குறிப்பில் உள்ளபடி ரூ.1,205 தொகையை அரசு முழுமையாக வழங்க வேண்டும். அங்கன்வாடி மையங்களின் மின் கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்.

ஓய்வு பெற்றவா்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி நிலுவையை வழங்க வேண்டும். பணியில் உள்ளவா்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி கடன் வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT