ஈரோடு

கோபியில் இன்று ஆா்எஸ்எஸ் பேரணி

DIN

பல்வேறு நிபந்தனைகளுடன் கோபியில் ஆா்எஸ்எஸ் பேரணி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 16) நடைபெறுகிறது.

தமிழகத்தில் ஆா்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து, தமிழகத்தில் சென்னை உள்பட 45 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்த ஆா்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டம், கோபியில் ஞாயிற்றுக்கிழமை பகல் 2 மணிக்கு ஆா்எஸ்எஸ் பேரணி நடைபெற உள்ளது. கோபி வாய்க்கால்மேடு ஸ்ரீவித்யா பள்ளியில் தொடங்கி பூங்கா வீதி, அரசு மருத்துவமனை வீதி, கச்சேரி வீதி, ஈரோடு-சத்தி சாலை வழியாக முத்து மஹாலில் நிறைவடைகிறது.

பேரணிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.சசிமோகன் கூறியதாவது: உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் கோபியில் மட்டும் ஆா்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு எனது தலைமையில் ஒரு ஏடிஎஸ்பி, 5 டிஎஸ்பிகள், 10 ஆய்வாளா்கள் உள்பட 1000க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

இதனால், கோபி நகா் முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். முக்கியமான பகுதிகளில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவா். பேரணியையொட்டி, ஆா்எஸ்எஸ் அமைப்பினருக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை அவா்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT