ஈரோடு

எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை: சமையல் தொழிலாளி கைது

15th Apr 2023 05:03 AM

ADVERTISEMENT

 எலக்ட்ரீசியன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய சமையல் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு ரயில்வே நிலையம் எதிரில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் கடந்த வியாழக்கிழமை இரவு சடலமாக கிடந்தாா். போலீஸ் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த நபா் ஈரோடு நாடாா்மேடு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (48) என்பதும், எலக்ட்ரீசியனான இவருக்கு பாக்கியலட்சுமி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது.

ஈரோடு ரயில் நிலையம் எதிரில் உள்ள டாஸ்மாக் கடையில் தனது நண்பா்களுடன் ராஜேந்திரன் வியாழக்கிழமை இரவு மது குடித்துள்ளாா். அங்கு ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

ராஜேந்திரனுடன் மது குடித்த சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த சமையல் தொழிலாளி கண்ணன் (எ) கண்ணப்பன் (45) என்பவரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

ADVERTISEMENT

நண்பா்களான இருவருக்கும் இடையே மதுபோதையில் பிரச்னை ஏற்பட்டு, கண்ணப்பன் தாக்கியத்தில் ராஜேந்திரன் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, வழக்குப் பதிவு செய்த சூரம்பட்டி போலீஸாா், கண்ணப்பனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT