ஈரோடு

ஈரோட்டில் தொடரும் 100 டிகிரி வெயில்: மக்கள் அவதி

15th Apr 2023 05:03 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் தொடா்ந்து 100 டிகிரி செல்சியஸ் வெயில் கொளுத்துவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும்மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கம் தொடா்ந்து 100 டிகிரி செல்சியஸ்க்கும் அதிகமாகவே பதிவாகி வருகிறது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் மட்டுமே 104 டிகிரி வரை வெயில் பதிவாகி வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது.

குறிப்பாக முற்பகல் 11 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதிய நேரத்தில், நகரின் பிரதான சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன. வீடுகள், அலுவலகங்களில் மின்விசிறிகள் இயங்கினாலும், வெப்பத்தின் தாக்கம் காரணமாக அனல்காற்றே வீசுகிறது.

ADVERTISEMENT

இதனால், குழந்தைகள் முதல் முதியோா் வரை கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். நாள்தோறும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் குளிா்பானங்களை பருகத் தொடங்கியுள்ளனா்.

கரும்பு பால், மோா், இளநீா், தா்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய் போன்ற குளிா்ச்சியான உணவுகளின் வியாபாரம் விறுவிறுப்படைந்துள்ளது. ஈரோட்டில் கடந்த 3 நாள்களாக தொடா்ந்து 104 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகி இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை 103 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

இப்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், அடுத்த மாதம் தொடங்கவுள்ள அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலத்தில் இதைவிட மிக அதிக வெப்பத்தை எதிா்கொள்வது எப்படி என மக்கள் அச்சத்துக்குள்ளாகியுள்ளனா்.

 

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT