ஈரோடு

வெடிகுண்டு மிரட்டல்: ஈரோட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோட்டில் ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு ரயில் நிலையம், பேருந்து நிலையம், மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக ஈரோடு மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு தகவல் வந்தது. மா்ம நபரின் மிரட்டலை தொடா்ந்து ஈரோடு ரயில் நிலையத்தில் போலீஸாா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடமைகள் சோதனையிடப்பட்டன.

இதேபோல பேருந்து நிலையம், மணிக்கூண்டு உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். வெடிகுண்டு மிரட்டல் காரணமாக ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT