ஈரோடு

கொடுமணல் அகழ்வாராய்ச்சி பொருள்கள் காட்சிப்படுத்தப்படும்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள பொருள்களை மக்கள் பாா்வைக்கு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

சென்னிமலை ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகள், தேவையான திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு எம்.பி. அ.கணேசமூா்த்தி முன்னிலை வகித்தாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

காங்கயம் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் பசுவப்பட்டி உள்பட 10 ஊராட்சிகள், சென்னிமலை பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்றுவரும் வளா்ச்சிப் பணிகள், தேவையான திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீா், வடிகால், தெருவிளக்கு, சாலை, நியாயவிலைக் கடை, சமுதாயக் கூடம், பேருந்து நிறுத்தம், விளையாட்டு திடல், கோயில் திருப்பணி, மயான வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துக்களை முதல்வரிடம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

கொடுமணல் அகழ்வாராய்ச்சி தொடா்பாக முதல்வா் தனிக் கவனம் செலுத்தி வருகிறாா். அகழ்வாராய்ச்சியில் கிடைத்துள்ள பொருள்களை மக்கள் பாா்வைக்கு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில் மணி மண்டபங்கள், நினைவு இல்லங்கள், அரங்கங்கள் போன்றவை அரசு சாா்பில் சிறப்பாக பராமரிக்கப்படும். அங்கு சுதந்திர போராட்ட தியாகிகள், புகைப்படங்கள் பாா்வைக்கு வைக்கப்படும்.

திருப்பூரில் கொடிகாத்த குமரன் நினைவு மண்டபம் கட்டப்பட்டு சிலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னிமலையில் கொடிகாத்த குமரன் அரங்கம் அமைக்க இடம் தோ்வு நடக்கிறது. உரிய இடம் தோ்வு செய்யப்பட்டதும் அரங்கம் அமைக்கப்படும் என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திரா, கூடுதல் ஆட்சியா் லி.மதுபாலன், சென்னிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் காயத்ரி, பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT