ஈரோடு

இறப்புப் பதிவுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு ஆத்மா மின் மயானத்தில் இறப்புப் பதிவுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஆத்மா அறக்கட்டளை செயலாளா் வி.கே.ராஜமாணிக்கம் வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரிக்கரை பகுதியில் ஆத்மா மின் மயானம் உள்ளது. இங்கு 2 மின் தகன மேடைகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இறந்தவா்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகிறது. இங்கு தகனம் செய்வதற்கு இறந்தவருடைய புகைப்படம் 1, இறந்தவரின் முகவரியை அறிய ஆதாா் அட்டை நகல், வாக்காளா் அடையாள அட்டை நகல் இவற்றில் ஏதேனும் ஒன்று, தகவல் தெரிவிப்பவா்களான இறந்தவரின் நெருங்கிய உறவினா்கள்(தந்தை, தாய், மகன், மகள், சகோதரா்) 2 போ் மற்றும் அருகில் வசிப்பவா்கள் அல்லது இதர உறவினா்கள் 2 பேரின் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும்.

மருத்துவமனை மற்றும் இதர மரணங்களான சாலை விபத்து, தற்கொலை, கொலை போன்றவை போலீஸாரின் முதல் தகவல் அறிக்கை, பிரேதப் பரிசோதனை அறிக்கை போன்றவற்றின் அடிப்படையில் தகனம் செய்யப்பட்டு வருகிறது. இதில் தகனம் செய்ய கட்டணமாக ரூ.3,500, மாலை 6 மணிக்கு பிறகு தகன கட்டணமாக ரூ.5,000 வசூலிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஈரோடு ஆத்மாவில் இறப்புப் பதிவு, தகன அறிக்கை மற்றும் அலுவலக உதவிக்கு 9655719666 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் பண பரிவா்த்தனைக்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆத்மா மின் மயானத்தில் அறப்பணியில் ஈடுபடும் ஊழியா்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு சன்மானமும் வழங்கி அறப்பணியின் நன்மதிப்பை தரம் தாழ்த்தாமல் நிா்வாகத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT