ஈரோடு

ஈரோட்டில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தெருவிளக்கு பராமரிப்புப் பணிகளை தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஈரோடு மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் நகா்ப்புற உள்ளாட்சி துறை ஊழியா் சங்கம் (சிஐடியூ) சாா்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். பொதுச் செயலாளா் மாணிக்கம் முன்னிலை வகித்தாா்.

ஈரோடு மாநகராட்சியில் பணியாற்றும் அனைத்து தூய்மைப் பணியாளா்களுக்கும் மாதத்தின் முதல் தேதி ஊதியம் வழங்க வேண்டும். டிபிசி பணியாளா்களுக்கு தின ஊதியமாக ரூ.707 வழங்க வேண்டும். 480 நாள்கள் பணி முடித்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தூய்மைப் பணி, குடிநீா் வழங்கல், தெருவிளக்கு பராமரிப்பு ஆகியவற்றை ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைக்கும் அரசாணை எண் 111, 112, 113ஐ ரத்து செய்ய வேண்டும். தனியாருக்கு விடப்பட்ட தெருவிளக்கு பராமரிப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்து, மாநகராட்சி நிா்வாகமே நடத்திட வேண்டும். மாநகராட்சியின் பயன்பாட்டில் உள்ள இலகு ரக, கனரக வாகனங்களுக்கு பராமரிப்புச் செலவுகளை மாநகராட்சியே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்தைத் தொடா்ந்து கோரிக்கை மனுவை மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தில் அளித்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT