ஈரோடு

பெண் கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

குடும்பத் தகராறில் பெண்ணை கத்தியால் குத்திக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஈரோடு ஆசிரியா் காலனி, ஔவையாா் வீதியைச் சோ்ந்தவா் விவேகானந்தன் (30). கொசு மருந்து தயாரிப்பு நிறுவன விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி தீபரஞ்சனி (24). ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் காப்பீட்டுத் திட்ட முகவராக தீபரஞ்சனி பணியாற்றி வந்தாா். தம்பதிக்கு ஒரு மகள் உள்ளாா்.

இந்நிலையில், தீபரஞ்சனியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கணவன், மனைவிக்கு இடையே 2018 ஏப்ரல் 22ஆம் தேதி பிரச்னை ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த விவேகானந்தன், தீபரஞ்சனியை குத்தியால் குத்திக் கொலை செய்தாா்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விவேகானந்தனைக் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை ஈரோடு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், வழக்கின் இறுதி விசாரணை முடிவடைந்து நீதிபதி மாலதி புதன்கிழமை தீா்ப்பளித்தாா். இதில் குற்றம்சாட்டப்பட்ட விவேகானந்தனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், மற்றொரு பிரிவில் ஒரு மாத சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீா்ப்பில் கூறியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT