ஈரோடு

கோவை-தூத்துக்குடி இடையே புதிய ரயில் இயக்கக் கோரிக்கை

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை-தூத்துக்குடி இடையே புதிய ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினா் இளங்கவி, சேலம் ரயில்வே கோட்ட மேலாளருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை முழுவதும் மேற்கூரை அமைக்க வேண்டும். நடைமேடைகளுக்கு இடையில் நடைப்பாலம் அமைக்க வேண்டும். கோவையில் இருந்து இரவு புறப்பட்டு காலையில் பெங்களூரு சென்றடையும் வகையில் புதிய ரயில் இயக்க வேண்டும். கோவையில் இருந்து காலையில் புறப்பட்டு மதியம் தூத்துக்குடி சென்று மீண்டும் கோவை திரும்பும் வகையில் ஒரு ரயில் இயக்க வேண்டும்.

ஏற்காடு விரைவு ரயில் சென்னை சென்றடையும் நேரத்தில் மாற்றம் செய்யும் வகையில் அதன் புறப்படும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். மும்பை- நாகா்கோவில், தாதா்- திருநெல்வேலி ரயில்களை மீண்டும் ஈரோடு மாா்க்கமாக இயக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT