ஈரோடு

நாளை வேளாண் குறைதீா் கூட்டம்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 30) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் செப்டம்பா் மாதத்துக்கான வேளாண் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளா்ச்சி மன்ற கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. காலை 10 மணி முதல் 11.30 வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்கப் பிரதிநிதிகள் விவசாயம் தொடா்பான பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். பகல் 12.30 முதல் 1.30 வரை அலுவலா்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT