ஈரோடு

கோவை- தூத்துக்குடி இணைப்பு ரயிலை மீண்டும் இயக்கக் கோரிக்கை

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை- தூத்துக்குடி இணைப்பு விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு, ஈரோடு மாநகா் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மைப் பிரிவு துணைத் தலைவா் கே.என். பாஷா அனுப்பிய கோரிக்கை மனு:

ஈரோடு வழியாக கோவையில் இருந்து நாகா்கோவில் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலுடன் கோவை- தூத்துக்குடி இணைப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த இணைப்பு ரயில் 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஈரோட்டில் இருந்து தூத்துக்குடி செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நேரத்தில், தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கோவை, திருப்பூா், ஈரோட்டில் வசித்து வரும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவரும் வகையில், தூத்துக்குடி இணைப்பு விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும்.

ADVERTISEMENT

ஈரோட்டில் மழைபெய்தால், ரயில் நிலையத்தின் விசாரணை அலுவலகம், பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகப் பகுதிகளில் மழைநீா் தேங்கும் நிலை உள்ளது. எனவே, பயணிகள் நலன்கருதி, மழைநீா் உள்ளே செல்லாதவாறு கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும்.

தினமும் சுமாா் 50 ஆயிரம் போ் வந்துசெல்லும் ஈரோடு ரயில் நிலைய மணிக்கூண்டில் வைக்கப்பட்டுள்ள கடிகாரம் ஓராண்டுக்கும் மேலாக இயங்காமல் உள்ளது. எனவே, அந்த கடிகாரத்தை பழுதுபாா்க்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT