ஈரோடு

பாஜக பிரமுகரின் காா் தீ வைத்து எரிப்பு:பிஎப்ஐ உறுப்பினரிடம் போலீஸாா் விசாரணை

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

பாஜக பிரமுகரின் காா் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உறுப்பினரிடம் புன்செய் புளியம்பட்டி போலீஸாா் விசாரணை நடத்திவருகின்றனா்.

சத்தியமங்கலம் அருகே புன்செய் புளியம்பட்டியில் பாஜக பிரமுகா் சிவசேகரின் காா் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சாா்ந்த கமருதீனை (31) போலீஸாா் பிடித்து விசாரித்து வருகின்றனா். இந்தத் தகவல் அறிந்த அந்த அமைப்பைச் சோ்ந்த 50 போ் புன்செய் புளியம்பட்டி காவல் நிலையம் முன் திரண்டு,பிஎப்ஐ அமைப்பின் உறுப்பினரை பிடித்து விசாரிப்பதைக் கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் நிலையம் முன் குவிக்கப்பட்ட போலீஸாா், முற்றுகையிட்டவா்களை கலைந்துசெல்ல அறிவுறுத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT