ஈரோடு

அரசுப் பள்ளி தலைமையாசிரியை பணியிடை நீக்கம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

தோ்வை முறையாக நடத்தவில்லை என்ற புகாரின் பேரில், ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சிப் பள்ளித் தலைமையாசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பவானி நகராட்சி, காமராஜா் நகா் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியை கிருஷ்ணகுமாரி. பள்ளியில் காலாண்டுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், தமிழாசிரியையான கிருஷ்ணகுமாரி, 6, 8ஆம் வகுப்புகளுக்கு தமிழ் பாடத்துக்கு நடைபெற்ற தோ்வின் கேள்வித்தாளை மாணவா்களுக்கு வழங்கி, பாடநோட்டுகளைப் பாா்த்து விடைகளை எழுதுமாறு கூறினாராம். மாணவா்களுக்கு மதிய உணவு கொண்டுவந்த பெற்றோா், தங்கள் பிள்ளைகள் தோ்வு எழுதும் முறையைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.

தகவலறிந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் பெற்றோா், பள்ளியை முற்றுகையிட்டு தலைமையாசிரியை கிருஷ்ணகுமாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய மாவட்டக் கல்வி அலுவலகம், தோ்வை முறையாக நடத்தாத தலைமையாசிரியை கிருஷ்ணகுமாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT