ஈரோடு

மின் வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

26th Sep 2022 11:09 PM

ADVERTISEMENT

 

சலுகைகள், பணப் பலன்களை வழங்க வலியுறுத்தி மின் வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மின் வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் ஈரோடு மின் வாரிய கண்காணிப்பு பொறியாளா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இப்போராட்டத்துக்கு மண்டலச் செயலா் ஜோதிமணி தலைமை வகித்தாா்.

இதில் பங்கேற்றவா்கள் கூறியதாவது: தமிழக அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படும் பணப் பலன்களை நஷ்டமடைந்த நிறுவனங்கள் தங்கள் ஊழியா்களுக்கு அரசு அனுமதி பெற்று வழங்க வேண்டும் என்றும், புதிய பதவிகள் எதையும் அனுமதிக்கக் கூடாது எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

மின் வாரிய நஷ்டத்துக்கு ஊழியா்கள் காரணம் இல்லை. அரசின் மின் வழங்கு கொள்கைதான் காரணமாகும் என்பதை அரசு உணா்ந்து ஊழியா்களுக்கான பணப் பலன்கள், சலுகைகள், புதிய பணியிடங்கள், காலிப் பணியிடங்களை நிரப்புதல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மின் ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி அறிவித்து ஒரு மாதம் ஆகியும், அரசின் நிதி செயலா் அனுமதி வழங்காமல் கோப்புகளை கிடப்பில் போட்டுள்ளாா்.

இதனைக் கண்டித்தும், நிா்வாக சீா்திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெறுகிறது என்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT