ஈரோடு

பவானிசாகா் அணைக் கரையில் குட்டிகளுடன் உலவிய யானைகள்

26th Sep 2022 11:08 PM

ADVERTISEMENT

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகா் அணைக் கரையில் உலவிய யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

பவானிசாகா் அணை நீா்த்தேக்கப் பகுதியை ஒட்டி பவானிசாகா் மற்றும் விளாமுண்டி வனப் பகுதிகள் அமைந்துள்ளன.

இந்த வனப் பகுதிகளில் கரடி, காட்டெருமை, மான், யானை உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.

ADVERTISEMENT

குடிநீா்த் தேடி வன விலங்குகள் பவானிசாகா் அணை பகுதிக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை வெளியேறிய 4 காட்டு யானைகள் பவானிசாகா் அணை கரையை ஒட்டி உள்ள பகுதியில் முகாமிட்டன. இதனால், அப்பகுதி பொதுமக்கள், பொதுப் பணித் துறை அதிகாரிகள் அச்சமடைந்தனா்.

அதே பகுதியில் நடமாடிய யானைகள் சில மணி நேரம் கழித்து வனப் பகுதிக்குள் சென்றன.

பவானிசாகா் அணை கரையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கரைப் பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று பொதுப் பணித் துறையினா் மற்றும் வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT