ஈரோடு

மஹாளய அமாவாசை: பண்ணாரி அம்மன் கோயிலில்தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்

DIN

மஹாளய அமாவாசையை முன்னிட்டு, பண்ணாரி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஈரோடு, திருப்பூா், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்துசெல்கின்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கோயிலுக்கு பக்தா்களின் வருகை அதிகமாக இருந்தது. பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோயிலுக்கு வந்த பக்தா்கள் கோயில் முன் உள்ள குண்டத்திற்கு உப்பு, மிளகு தூவி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

விரதம் இருந்து மதியம் உச்சிபூஜையில் பங்கேற்ற பெண்கள், கோயில் முன் நெய்தீபம் ஏற்றி பண்ணாரி அம்மனை வழிபட்டனா். கோயில் வளாகத்தில் பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

உண்மையே மக்களாட்சியின் அடிப்படை!

உள்ளாட்சி ஊழியா்கள் ஜிபிஎப் விவகாரம்: புதுவை அரசுக்கு கோரிக்கை

சுற்றுச்சூழலைக் கெடுக்கும் தைலமரங்கள்: உச்ச நீதிமன்றத்தை நாட விவசாயிகள் முடிவு

SCROLL FOR NEXT