ஈரோடு

பெருந்துறையில் வக்ஃபு வாரியத்திற்கு நிலம்:ஆட்சியரிடம் மனு அளிக்க பொதுமக்கள் முடிவு

DIN

பெருந்துறை ஒன்றியப் பகுதிகளில் சுமாா் 250 ஏக்கா் நிலம் வக்ஃபு வாரியத்திற்கு இருப்பதாக அந்த வாரியத்தால் கூறப்படுகிறது. இது தொடா்பாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க முடிவுசெய்துள்ளனா்.

இதற்கான ஆலோசனைக் கூட்டம், பெருந்துறை மேக்கூா் காமாட்சி அம்மன் கோயில் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், சத்தியமங்கலம் தன்னாா்வலா் சுப. தளபதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று தடை உத்தரவு குறித்து விளக்கினாா்.

இதையடுத்து, சத்தியமங்கலம், கோபியைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள், ஈரோடு மாவட்ட ஆட்சியரை திங்கள்கிழமை சந்தித்து மனு அளிப்பது, அவா்களுடன் சோ்ந்து பெருந்துறை பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் பேரணியாகச் சென்று மனு அளிப்பது என கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT